search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் நினைவிடம்"

    • எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர்.
    • திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    இதன் பின்னர், செய்தியாளர்களிடம் சசிலா பேசியதாவது:-

    அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களில் முடிவு அடிப்படையிலேயே எல்லாம் நடக்கும்.

    ஜெயலலிதா ஆட்சியில் பொங்கலுக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
    • அதைத்தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத்த வேண்டும்.

    ×